Breaking

Post Top Ad

Wednesday, December 19, 2018

மட்டக்களப்பில் சமுர்த்தி சௌபாக்கியா விற்பணைக்கண்காட்சி நடைபெற்றது

(சதீஸ், வரதன்)    
மட்டக்களப்பில் சமுர்த்தி சௌபாக்கியா விற்பணைக்கண்காட்சி 18.12.2018 செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு பழைய கல்லடிப்பாலததில் நடைபெற்றது

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் இக் கண்காட்சி நடைபெற்றது..


மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி ஏ.பாக்கியராஜா தலைமையில் நடைபெற்ற சௌபாக்கிய விற்பணைக்கண்காட்சியை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் ஆரம்பித்து வைத்தார்.

இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சிறீகாந்த, திருமதி நவரூபா ரஞ்சனி உட்பட பிரதேச செயலாளர்கள் திணைக்கள தலைவர்கள் சமுர்த்தி முகாமையாளர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த விற்பணைக்கண்காட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் சமுர்த்தி பயணாளிகளின் உற்பத்திப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டதுடன் அவைகள் விற்பணைக்கும் விடப்பட்டன.

சமுர்த்தி திட்டத்தின் மூலம் உதவி பெற்று தமது உற்பத்திகளை சிறப்பாக மேற்கொண்டு வரும் பயணாளிகள் இக்கண்காட்சியில் கலந்து கொண்டிருந்தனர்.





































No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages