Breaking

Post Top Ad

Sunday, December 30, 2018

தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதன் மூலமாக அரசாங்கம் ஸ்திரத்தன்மையைப் பெறும்

ஏனைய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கி                        தேசிய அரசாங்கம் ஒன்றை  மிகவிரைவில் அமைப்பதன்மூலமாக                        தற்போதைய அரசாங்கம் ஸ்திரத்தன்மையைப்பெறுமென                             சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா (28) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

அண்மையில் எமது நாட்டில் ஏற்பட்ட   அரசியல் குழப்பத்தின்போது சில அரசியல்வாதிகள்            பதவி மற்றும் பணத்திற்காக  பொய்யான அரசாங்கத்தில் இணைந்தனர்.              ஆனபோதிலும் அழைப்புக்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாம் அவற்றிற்கு தலைசாய்க்காது நீதி, நியாயம் ஜனநாயகத்திற்காக அகிம்சை வழியில் போராடினோம்  என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்   மட்டக்களப்பு மாவட்ட நாடாமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்   சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராக பதியேற்றதையடுத்து ஏறாவூரில் பொதுமக்களினால் வழங்கப்பட்ட வரவேற்பு கௌரவத்தினையடுத்து             நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே  அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சரை பொதுமக்கள்   ஏறாவூர் மணிக்கூட்டுக்கோபுரச் சந்தியிலிருந்து     புன்னக்குடாவீதி வழியாக அழைத்துச் சென்றனர்.
இந்நிகழ்வில்  ஆயிரக்கணக்கானோர் இணைந்திருந்தனர்.
புகையிரத நிலைய வீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சமூக முக்கியஸ்தர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
இங்கு அலி ஸாஹிர் மௌலானா தொடர்ந்து பேசுகையில்-- எமது நாட்டில் அரசியல் குழப்பம் தற்போது தணிந்துள்ளது. இந்நிலையில் ஏனைய கட்சிகளிலிருந்து அரசாங்கத்துடன் இணையவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களைக்கொண்டு தேசிய அரசாங்கம் ஒன்று மிகவிரைவில் அமைக்கப்படுவதுடன் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப்பதவிகளும் வழங்கப்படள்ளன.

அரசியல் குழப்பத்தின்போது நாட்டைப் பாதுகாப்பதற்காக எமது கட்சியின் தலைமைத்துவம் பாரிய பங்களிப்பினைச் செய்தது.; எமது சமூகம், எதிர்கால சந்ததிகள் சுதந்திரமாக, சுபீட்சமாக வாழவேண்டும் என்பதற்காகவே அவ்வாறாக உறுதியுடன் கொள்கை தவறாது செயற்பட்டோம். அதையடுத்து எமக்குக்கிடைத்த நீதிமன்றத் தீர்ப்பு எதிர்காலத்திற்கு சிறந்த ஒரு பாடமாக அமைந்துள்ளது என்றார்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages