இந்தியாவில் கணவரின் தவறான பழக்கத்தால் அவரை பிரிந்து வாழ்ந்த மனைவியை, கணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லியை சேர்ந்தவர் ஹர்கேஷ் குமார். இவர் மனைவி கவிதா குமாரி (28). தம்பதிக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
ஹர்கேஷ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில் கடந்த 2016-ல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.
இதன் காரணமாக ஹர்கேஷ் போதை பழக்கத்துக்கு அடிமையானார். இது தொடர்பாக கணவன் மனைவி இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதன்பின்னர் தன்னை கொடுமை படுத்துவதாக கவிதா பொலிஸ் புகார் அளித்தார். அதே ஆண்டில் கணவரை பிரிந்த கவிதா தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று தனது இரண்டு குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விட்டு தனது வீட்டருகில் கவிதா வந்து கொண்டிருந்தார்.
அப்போது தனது இரண்டு நண்பர்களுடன் அங்கு வந்த ஹர்கேஷ் மனைவியுடன் சண்டை போட்டுள்ளார்.
பின்னர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் கவிதாவை சுட்டு விட்டு அங்கிருந்து ஹர்கேஷ் உட்பட மூவரும் தப்பியோடியுள்ளனர்.
இதையடுத்து தோள்பட்டையில் குண்டடி பட்ட கவிதாவை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் ஹர்கேஷை தேடி வருகிறார்கள்
Post Top Ad
Tuesday, December 11, 2018
Home
Sri lanka
world
கணவருக்கு ஏற்பட்ட தவறான பழக்கத்தால் பிரிந்த குடும்பம்: அழகான இளம் மனைவிக்கு நேர்ந்த கதி
கணவருக்கு ஏற்பட்ட தவறான பழக்கத்தால் பிரிந்த குடும்பம்: அழகான இளம் மனைவிக்கு நேர்ந்த கதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.