Breaking

Post Top Ad

Sunday, December 30, 2018

மட்டக்களப்பு நகரில் உணவகங்கள், வர்த்தக நிலையங்கள் திடீர் பரிசோதகர்கள் - சில உணவகங்கள் மூடப்பட்டது!

மட்டக்களப்பு மாநகரில் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு பொதுமக்களின் நன்மை கருதி பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட   சோதனை நடவடிக்கையில்  சுகாதாரத்திற்கு உதவாத நிலையில் இருந்து மூன்று உணவு விடுதிகள் மூடப்பட்டதுடன் பெருமளவான உணவுப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.


இரண்டு தினங்கள் நடைபெற்ற இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது சுகாதாரத்திற்கு ஏற்றமுறையில் இல்லாத மூன்று உணவகங்கள் மூடப்பட்டதுடன் இரண்டு பலசரக்கு கடைகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிசெய்யப்பட்டு முறையாக சுற்றுத்துண்டு இடப்படாத நிலையில் விற்பனைக்காக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இரண்டு களஞ்சிய சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.


இந் நடவடிக்கையின்போது 14க்கும் மேற்பட்ட உணவகங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் 06க்கும் மேற்பட்ட பலசரக்கு கடைகளும் இரண்டு வெதுப்பகங்கள், மூன்றுக்கும் மேற்பட்ட பல்பொருள் விற்பனை நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொதுச்சுகாதார பரிசோதகர் அமுதமாலன் தெரிவித்தார். 




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages