அம்பாறை, அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குள் இயங்கிவரும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களிலும், மாணவர்களுக்கான பிரத்தியேக கல்வி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று மாநகர மேயர் ஏ. அஹமட் ஸக்கி நேற்று (09) தெரிவித்தார்.
தனியார் கல்வி நிறுவனங்கள், 2019ஆம் ஆண்டுக்கான பிரத்தியேக கல்வி நடவடிக்கைகளை, எதிர்வரும் 25ஆம் திகதிக்குப் பின்னரும், க.பொ.த உயர்தரத்துக்கான வகுப்புகளை ஜனவரி 15ஆம் திகதிக்குப் பின்னரும் ஆரம்பிக்குமாறும், இதுவரை பதிவுசெய்யப்படாத தனியார் கல்வி நிலையங்கள், மாநகர சபையில் பதிவுசெய்து கொள்ள வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.