மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சீ மற்றும் டி சான்றிதழ்களைப் பெற்ற ஹோட்டல்கள் ஏ மற்றும் பீ சான்றிதல்களை ஒரு மாதகாலத்திற்குள் பெற்றுக்கொள்ளாது விட்டால் அந்த ஹோட்டல்களின் அனுமதிகள் இரத்து செய்யப்படும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல் சோதனை செய்யப்பட்டு தரச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் கே.சித்திரவேல் தலைமையில் இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
ஏ தரத்திலான 15 ஹோட்டல்களும் பி தரத்திலான 23 ஹோட்டல்கள், சீ தரத்திலான 40 ஹோட்டல்கள், டி தரத்திலான 02 ஹோட்டல்களுக்கு தரச்சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இதன்போது மாநகர முதல்வர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு நகருக்கு பெருமளவான மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். அவர்கள் தங்களுக்கான உணவினைப் பெற்றுக்கொள்ளும் போது சுத்தமான உணவு வழங்கப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
அதனடிப்படையில் மாநகர சுகாதார பிரிவினரால் ஆய்வு செய்யப்பட்டு இந்த தரச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. குறித்த தரச்சான்றிதழ்கள் ஹோட்டல்களில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
அவ்வாறு செய்யாத உணவகங்களின் அனுமதிகள் இரத்துச் செய்யப்படும். பொதுமக்கள் தரமான உணவுகளையும் சுத்தமான உணவுகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் மாநகரசபை உறுதியாகவுள்ளது. என்றார்.
Post Top Ad
Sunday, December 9, 2018
மட்டக்களப்பில் சில ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம்! வெளியானது எச்சரிக்கை.
Tags
Batticaloa#
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Batticaloa,
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.