Breaking

Post Top Ad

Monday, December 3, 2018

சுவரொட்டிகளில் சபாநாயகருக்கு வாழ்த்து

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களிலும் இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வாழ்த்துத் தெரிவித்து,  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

“எமக்குப் பெருமை - நாட்டுக்குப் பெருமிதம்” என்ற வாசகம் இந்த சுவரொட்டிகளில் காணப்படுகின்றது.

நாடாளுமன்றத்தின் சம்பிரதாயங்கள், அதிகாரங்கள் மற்றும் மக்களின் அபிலாஷைகளைத் துணிகரமாக நின்று பாதுகாத்ததுடன் , நாட்டின் ஜனநாயகத்தை நிலை நிறுத்த அச்சமின்றி வீரத்துடன் கடமையாற்றிய சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு, நாட்டு மக்களின் ஆசிர்வாதங்கள் எனவும், இந்த  சுவரொட்டிகளில் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages