வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பு காரணமாக முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மன்னார் மாவட்டத்தில் நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் பணியில் இளைஞர் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில் ஒரு தொகுதி நிவாரணப் பொருட்கள் நேற்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு, தேவிபுரம் இடைதங்கல் முகாமில் உள்ள 102 குடும்பத்தினருக்கு உலர் உணர்வு பொருட்கள் அடங்கிய பொதியும், 60 குடும்பங்களுக்கு நுளம்பு வலையும் சிறுவர்களையும் ,நோயாளர்களையும் கொண்ட குடும்பத்திற்கு பால்மாவும், முல்லைத்தீவு பிரதேச செயலாளரின் அனுமதியுடன் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.