Breaking

Post Top Ad

Sunday, December 2, 2018

மட்டக்களப்பு நகரை அழகுபடுத்த மரம் வளர்க்கும் திட்டம்

மட்டக்களப்பு நகரை அழகுபடுத்த மரம் வளர்க்கும்  திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரை அழகுபடுத்தல் செயற்றிட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மட்டக்களப்பு - திருகோணமலை வீதியை அழகுபடுத்தும் நோக்கில் 1000 மரங்களை நாட்டும் வேலைத்திட்டம் சனிக்கிழமை (01.12.2018) மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.



இத்திட்டத்திற்கு யுனிசெப் நிறுவனம் நிதி அனுசரணை வழங்குகின்றது.

மரம் நிகழ்வில் மாநகர ஆணையாளர் கே. சித்திரவேல், பிரதி ஆணையாளர் என். தனஞ்ஜெயன், மாநகரசபை உறுப்பினர்கள், யுனிசெப் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், மாநகர சபையின் ஊழியர்கள் பாடசாலைகளின் மாணவர்கள் உட்பட இயற்கைச் சூழல் ஆரவலர்களும் கலந்து கொண்டு மரங்களை நாட்டி வைத்தனர்.‪






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages