Breaking

Post Top Ad

Thursday, December 13, 2018

சந்திவெளி பிரதேசத்தில் பொதுநூலகத்துக்கு அடிக்கல் வைப்பு

மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட சந்திவெளி பிரதேசத்தில் பொதுநூலகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக புதன்கிழமை (12) நடைபெற்றது.
 

இதற்கென  25 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திருமதி  ஸோபா ஜெயரஞ்சித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிரான் பிரதேச செயலாளர் சுந்தரமூர்த்தி ராஜ்பாபு       பிரதம அதிதியாகக்கலந்துகொண்டார்.


உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பிரசன்னமாயிருந்தனர்.

பிரதேச சபையின் இவ்வாண்டிற்கான வரவு- செலவுத்திட்டத்தில் சபையின் தவிசாளரது பரிந்துரைக்கமைவாக  இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages