Breaking

Post Top Ad

Friday, December 14, 2018

மட்டக்களப்பில் கேரளாக் கஞ்சாவுடன் நால்வர் கைது

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் 05 கிலோகிராம்  கேரளாக் கஞ்சாவைக் கொண்டுசென்ற நால்வரை, நேற்றுமுன்தி (12) மாலை கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடியில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த சொகுசு வானின், மிகவும் இரகசியமான முறையில் இரு பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இக்கேரளாக் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக, களுவாஞ்சிகுடிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஜி.யு.ஐ.குணவர்த்தன தெரிவித்தார்.

இதனையடுத்தே, வானிலிருந்த நால்வரையும் கைதுசெய்துள்ள களுவாஞ்சிகுடிப் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages