சந்தேகநபர் நீண்ட காலமாக மட்டக்களப்பு தலைநகர் பிரதேசத்தில் பல வீடுகளை உடைத்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுவந்துள்ளதாக தெரியவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரால் திருடப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலன் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கூளாவடி பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய குறித்த சந்தேகநபர், மட்டக்களப்பு நகரில் 8 வீடுகளிலும் காத்தான்குடியில் ஒரு வீட்டிலும் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை மத்தியமுகாம், சம்மாந்துறை, கல்முனை, களுவாஞ்சிக்குடி கிரான், போன்ற பிரதேசங்களில் உள்ள நகை அடகுவைக்குமிடங்களில் ஈடுவைக்கப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.