கிழக்குமாகாண
பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பன்மைத்துவ கலாசார நிகழ்வும்
,கலைஞர்கள் கௌரவிப்பும் மட்டக்களப்பு
கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக மண்டபத்தில் இன்று நடைபெற்றது
கிழக்குமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர்
திருமதி வளர்மதி ரவிச்சந்திரன் தலைமையில்
நடைபெற்ற கிழக்குமாகாண
பன்மைத்துவ கலாசார நிகழ்வில் கிழக்குமாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகம பிரதம
அதிதியாக கலந்துகொண்டார்
கிழக்குமாகாண
பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பன்மைத்துவ கலாசார கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வில் கிழக்கு
மாகாணத்தில் அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள
தமிழ் ,சிங்கள ,முஸ்லிம் ,பறங்கியர் நான்கு இனத்தவர்களில் அரச ஓய்வுதியம் பெறாத 38 கலைஞர்கள் பொன்னாடை போர்த்தி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
இந்நிகழ்வில் கிழக்குமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள
அதிகாரிகள் , பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள
அமைச்சின் அதிகாரிகள் அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மாவட்ட கலாசார
அலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் ,அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை மாவட்ட கலைஞர்கள் என பலர் கலந்துகொண்டனர்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.