Breaking

Post Top Ad

Saturday, December 1, 2018

வெளிநாட்டிலிருந்து வந்த கணவர் கொன்று புதைத்துவிட்டு நாடகமாடிய மனைவி: 2 ஆண்டுகளுக்கு பின்னர் காத்திருந்த அதிர்ச்சி

காதலனோடு சேர்ந்து வெளிநாட்டிலிருந்து வந்த கணவரைக் கொன்று புதைத்துவிட்டு, காணவில்லை என்ற இரண்டு ஆண்டுகளாக நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தின் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த இளையராஜாவிடமிருந்து மனக்கசப்பால் மனைவி பிரிந்துபோக, தனது சகோதரி மகள் முத்துவை 11 ஆண்டுகளுக்கு முன் மணமுடித்தார்.


இளையராஜா - முத்து தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் தங்கி கொத்தனார் வேலை செய்த இளையராஜா, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, சொந்த ஊருக்கு வந்து சென்றுள்ளார்.
இந்த வகையில், கடந்த 2016ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பியிருந்த இளையராஜாவை காணவில்லை என அவரது மனைவி முத்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.




செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி வாக்கில், வீட்டை விட்டுப் போன இளையராஜா வீடு திரும்பவில்லை என தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து பொலிசார் தீவிரமாக தேடியும், இளையராஜா குறித்த துப்பு கிடைக்கவில்லை.. மாதங்கள் கடந்த நிலையில், இளையராஜாவின் மனைவி முத்துவை அவ்வப்போது கண்காணித்தபோது, பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, சில மாதங்களாக முத்துவின் செல்போன் அழைப்புகளை கண்காணிக்கத் தொடங்கினர். அப்போது, தான் இளையராஜா காணாமல் போனதற்கான துப்புத் துலங்கியது.

அதில், மணிகண்டன் என்பவர் முத்துவுடன் அடிக்கடி பேசி வருவதையும், அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வதையும் கண்டறிந்தனர்.
இருவரையும் வரவழைத்த பொலிசார் தங்கள் பாணியில் விசாரித்தபோது, இளையாராஜா காணாமல் போகவில்லை என்பதும், கொன்று புதைக்கப்பட்டதும் தெரியவந்தது..

மணிகண்டன், கார் ஓட்டுநர் ஆவார். இளையராஜா வீட்டின் அருகில் வீடு எடுத்து குடும்பத்தினருடன் தங்கியிருந்த நிலையில் முத்துவுடன் ஏற்பட்ட நட்பு, பின்னாளில் காதலாக மாறியுள்ளது.

இருவரும் நெருக்கமாக பழகியதை அறிந்த, இளையராஜா கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மணிகண்டன், வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் ஊருக்கு வந்த இளையராஜாவை தனது நண்பர்கள் முத்துக்கருப்பன், கருப்பசாமி ஆகியோரோடு சேர்ந்து, தாக்கி கொன்றிருக்கிறார்.

பின்னர், இளையராஜா உடலை எடுத்துச் சென்று, தனது சொந்த ஊரான கம்பாளி கிராம காட்டுப்பகுதியில் புதைத்ததும் தெரியவந்தது.
பொலிசார் தன்னை கண்காணிப்பது குறித்து முத்து அளித்த தகவலை அடுத்து உஷாரான மணிகண்டன், இளையராஜா உடலை புதைத்த இடத்திற்குச் சென்று உடலை புதைத்த இடத்தில் தோண்டி, எலும்புகளை பையொன்றில் சேகரித்து, வாடகை கார் மூலம் கொண்டு சென்று, வைகை ஆற்றில் விட்டதாக, மணிகண்டன் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
இதையடுத்து பொலிசார் முத்துவையும், மணிகண்டனையும் கைது செய்துள்ளனர்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages