Breaking

Post Top Ad

Wednesday, December 26, 2018

மட்டக்களப்பில் சுனாமிப் பேரலையால் காவுகொள்ளப்பட்ட உறவுகளுக்கு 14வது ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பில் சுனாமிப் பேரலையால் காவுகொள்ளப்பட்ட தமது உறவுகளை நினைவுகூர்ந்து  அஞ்சலி செலுத்திய நிகழ்வு  நாவலடி, கல்லடி புதுமுகத்துவாரம் போன்ற இடங்களில்  புதன்கிழமை 26ஆம் திகதி காலை 9.10 மணியளவில் நடைபெற்றது.


இவ் அஞ்சலி செலுத்தும் பிரதான நிகழ்வில், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை, பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் மற்றும் மாநகர சபை ஆணையாளர், மாநகர பிரதி முதல்வர், மாநகரசப உறுப்பினர்கள், உயிர்நீத்தோரின் உறவுகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கடந்த 2014ஆம் ஆண்டு ஆழிப் பேரலையால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் ஆத்டமா சாந்தி வேண்டி விசேட பூசைகளும் கிரியைகளும் விசேட பிரார்த்தனை இடம்பெற்றது.

















No comments:

Post a Comment

Pages