
நிகழ்வின் போது மகாகவி பாரதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர்களை தூவியும் வணக்கத்தை செலுத்தியிருந்தனர்.மேலும் குறித்த நிகழ்வில் மாணவர்களால் பாரதியாரின் தமிழ்தாய் வாழ்த்தும், பாரதியார் பாடல்களும் அங்கு இசைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் யாழ்.இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன், யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட், யாழ்.அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், வடமாகாண சபை பேரவை தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இலங்கோவன், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், ஆர்.ஜெயசேகரம், யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சண்முகலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.