இன்று நள்ளிரவு (28) முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகளை நடாத்துதல், அதற்கு உதவுதல், கருத்தரங்குகள், மாதிரி வினாத்தாள்கள் வழங்குதல் உள்ளிட்ட எந்தவொரு விடயங்களையும் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தினால் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வாறான விடயங்களில் ஈடுபடும் நபர்கள், மற்றும் நிறுவனங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவ்வாறான விடயங்கள் தொடர்பில் 1911 எனும் உடனடி தொலைபேசி இலக்கம் மூலம் பரீட்சைகள் திணைக்களத்திற்கோ, 011 2 421 111 எனும் தொலைபேசி வழியாக பொலிஸ் தலைமையகத்திற்கு அல்லது 119 எனும் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கதிற்கோ அறியத்தருமாறு பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜிதவினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 03 ஆம் திகதி திங்கட்கிழமை, கல்வி பொது தராதரப் பத்திர சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதோடு, எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன் அடிப்படையில் வழமை போன்று க.பொ.த. (சா/த) மற்றும் உயர் தர பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் இவ்வாறு தடை அமுல்படுத்தப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
Post Top Ad
Tuesday, November 27, 2018
நள்ளிரவு முதல் O/L மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு தடை
Tags
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.