முனைப்பு நிறுவனத்தினால் ஏற்பாட்டில், சுவிஸ் லுட்சேர்ன் அருள்நிறை ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் தாயக மக்களுக்கான இரங்கும் உள்ளங்கள் நலன் காக்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியுதவியின் ஊடாக மட்டக்களப்பு தாழங்குடாவைச்சேர்ந்த குடும்பத்துக்கு தலைமை தாங்கும் குடும்பத்தலைவியின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தையல் மெசின் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மகிழடித்தீவு கிராமத்திலும் குடும்பத்துக்கு தலைமைதாங்கும் பெண்னொருவுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆடுகளும், மகிழவெட்டுவான் கிராமத்தில் இன்னுமொரு குடும்பத்துக்கு தலைமைதாங்கும் குடும்பத்தலைவிக்கு சிற்றுண்டிச்சாலை அமைப்பதற்கான உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் கொடுவாமடு தரிவனம் பாலர் பாடசாலை மாணவர்கள் எதிர் நோக்கும் குடிநீர்ப்பிரச்சினையை தீர்க்குமுகமாக நீர்தாங்கியொன்றும், அதனை நிலையாக நிறுத்தி வைப்பதற்கான இருக்கைக்கான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.