இலங்கையில் முதன்முறையாக ஸ்ரீ ஏகாதச ருத்ர வேள்வி நவம்பர் (19.20.21.22) திகதிகளில் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய முன்றலில் இலங்கை இந்தியாவின் தலைசிறந்த 108 சதுர்வேத பண்டிதர்களின் ஸ்ரீ ஏகாதச ருத்ர வேள்வி மிகப் பிரமாண்டரமான முறையில் இடம்பெற்றிருந்தது.
இவ்வேள்வியின் இறுதி நாளான இன்று (22) அதிகாலை 4.00 அளவில் ஆரம்பமாகி பி.ப 2.00 மணிவரையும் நாட்டு மக்களின் நன்மைவேண்டி ஓருலெட்சம் மூலிகைகளைப்கொண்டு பிரமாண்டமான முறையில் ஏகாதர்ச ருத்ர வேள்வி; இடம்பெற்றிருந்தது.
அத்துடன் இறுதிநாள் ஏகாதர்ச ருத்ர வேள்வி; கிரிகைகளில் கலந்துகொள்வதற்காகவும் உருத்திராட்ச மாலை பெற்றுக்கொள்வதற்காகவும் நாட்டில் பல பாகங்களிலிருந்து ஏராளமான அடியார்கள் வருகைதந்திருந்தனர்.
இதேவேளை உருத்திராட்ச மாலையை பெற்றுக்கொள்வதற்காக ஒருசில அடியார்கள் முண்டியடித்துக்கொண்டு பல துன்பங்களையும் துயரங்களையும் எதிர்நோக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது..
ஸ்ரீ ஏகாதச ருத்ர வேள்வியின் சிறப்பு நிகழ்வின்போது டாக்டர் நித்தியஸ்ரீ மகாதேவன் அவர்களது மிருதங்க இசைக்கச்சேரியும் இடம்பெற்றது
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.