அரியாலை கால்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில், இளவாலை யங்ஹென்றிஸ் விளையாட்டுக் கழகத்தை வென்றே பாடுமீன் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியிருந்தது.
இரண்டாம் பாதியில் ஹென்றிஸ் அணிக்கு, 51, 60ஆவது நிமிடங்களில் கிடைத்த பிறீ கிக் வாய்ப்ப்புகளை அவ்வணி வீணடித்தது. 62ஆவது நிமிடத்தில் கிடைத்த மிக இலகுவான கோல் பெறும் வாய்ப்பும் ஹென்றிஸ் அணிக்கு கைநழுவிப் போனது.
65ஆவது நிமிடத்தில் அவ்வணியின் ஞானரூபன் கோல் கம்பத்தை நோக்கி உதைந்த அருமையான உதையொன்று கோல் கம்பத்துக்கு மேலால் சென்றது. அடுத்த இரண்டு நிமிடங்களில் பாடுமீன் அணியின் சாந்தன் உதைந்த மிக நேர்த்தியான உதையையை, ஹென்றிஸ் கோல் காப்பாளர் அமல்ராஜ், அசாத்தியமாக பிடித்து கோலைத் தடுத்தார்.
எவ்வாறெனினும், 77 ஆவது நிமிடத்தில் சாந்தன் மிகவும் அபராமாக பாய்ந்து உதைந்து பெற்ற கோலோடு இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற பாடுமீன் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.