மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவில், கடமையில் இருந்த வேளையில் வெள்ளிக்கிழமை (30) அதிகாலை இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் சிங்கள இனத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருமே இங்கு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளவர்களாவர்.
இவர்கள் இருவரும் வவுணதீவு பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் கடமையில் இருந்தவேளையிலே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மரண விசாரணையின் பொருட்டு வெள்ளிக்கிழமை காலை ஸ்தலத்திற்கு வருகைதந்த நீதிபதி மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர், சோக்கோ பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மரணமடைந்த தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்த்தல் தினேஸ் பெரியநீலாணையைச் சேர்ந்தவர் எனவும், இவர்கள் இருவரும் புதிதாக பொலிஸ சேவையில் இணந்தவர்கள் எனவும் தெரியவருகின்றது.
இது இவ்வாறு இருக்க கொலையாளிகள் இவர்களைச் சுட்விட்டு மரணமைடந்த இரண்டு பெலிசாரிடமும் இருந்த 2 றிவோளர் கைத்துப்பாக்கிகளையும் எடுத்தச் சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிவந்துள்ளது.
இந்நிலையில் பொலிசாரின் படுகொலை தொடர்பில் விசாரணகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.