இதில், கிண்ணியா பெண்கள் மகா வித்தியாலயம் - முதலாமிடத்தையும், இஹ்ஸானியா மகளிர் வித்தியாலயம் - இரண்டாம் இடத்தையும், அல் ஹிரா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் - மூன்றாடம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளன.
அதேவேளை, டெங்கு நோயின் ஆபத்து குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், பாடசாலை மாணவர்களுக்கிடையில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் இஹ்ஸானியா மகளிர் வித்தியாலயம் முதலாம் - மூன்றாம் இடங்களையும் அல் ஹிரா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.
இவர்களுக்கான பணப் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கும் வைபவம் இன்று(29) பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம். அஜீத் தலைமையில், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த வைபவத்தில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வி. கயல்விழி, கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர், கிண்ணியா நகரசபைத் தலைவர், கிண்ணியா பிரதேச கடற்படைத் தளபதி ஆகியோர் அதீதியாகக் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.