
இதில் இறுதிநாளான வியாழக்கிழமை (22)பிற்பகல் அங்கு வழங்கப்பட்ட ருத்திராட்ச மாலை பக்தர்களுக்கு இலவசமாக வழங்கபட்டன. இதனைப் பெற பலர் முண்டியடித்துக் கொண்டு சென்றதனால் நெரிசலில் அகப்பட்டு பலர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவற்றில் பாதிக்கப்பட்டவர்கள் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் 17 அனுமதிக்கப்பட்டதாகவும் அதில் 3 பேரை மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் 14 பேர் தொடர்ந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும். களுவாஞ்சிகுடி ஆதர வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அகத்தியர் பெருமான் திருவானைப்படி சித்தர்களின் குரல் மஹா சித்தர்களின்; ஏற்பாட்டினால் உலக நன்மைக்காகவும் உலகில் மாபெரும் சித்தர்களின் அருளாட்சி மலரவும் ஈழவள நாடு மாபெரும் சிவபூமியாகவும் ஸ்வர்ண பூமியாகவும் குபேர பூமியாகவும் திகழவும் கார்த்திகை மாதம் 2018 -19 20 21 22 ஆகிய திகதிகளில் இலங்கையில் மட்டக்களப்பில் களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் தேவஸ்தானத்தில் இடம்பெற்றது.
இதன் ஆரம்ப நிகழ்வு திங்கட் கிழமை (19) இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள மாகா சித்தர்களினால் இந்த ஏகாதச ருத்ர வேள்வி மிகவும் பிரம்மண்டமான முறையில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.