Breaking

Post Top Ad

Tuesday, November 6, 2018

பிரதியமைச்சர் பதவியை வியாழேந்திரன் தூக்கியெறிய வேண்டும் - தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ் மக்களின் போராட்டத்தினையும் கோரிக்கையினையும் புறந்தள்ளி பிரதியமைச்சராக அரசாங்கத்துடன் இணைந்துள்ள எஸ்.வியாழேந்திரன் தனது பதவியினை தூக்கியெறிந்து விட்டு மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை முன்வைத்துள்ளது.



மட்டக்களப்பில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் காரியாலயத்தில் இன்று பகல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கைக்கே தமிழ் மக்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்ததாகவும் அதற்கு மதிப்பளித்து அவர் மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் வரவேண்டும் எனவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் ஆகியோர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறுபான்மை சமூகங்களின் எதிர்பார்ப்பினை கவனத்தில் கொள்ளாத நிலையிருந்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.



19வது அரசியலமைப்பு சட்டத்தினை மீறும் வகையில் கடந்தகால செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் போது, அரசாங்கத்தரப்பிற்கு பிரதியமைச்சர் பதவியைப் பெற்று சென்ற பிரதியமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தமது அமைச்சு பதவியினை தூக்கியெறிந்து விட்டு மீண்டும் தம்முடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. 


இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான டெலோவின் உபதலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார், அக்கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான புலொட்டின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் மண்முனை மேற்கு பிரதேசபையின் பிரதி தவிசாளருமான செல்லத்துரை, தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா ஆகியோர் கலந்துக்கொண்டு கருத்துகளை முன்வைத்துள்ளனர்



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages