பொன் ஆனந்தம்
ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மக்கள் குரலுக்கு செவிமடுத்து, நாடாளுமன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி, திருகோணமலையில்இன்று (25) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரும் பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
திருகோணமலை, என்.சீ. வீதியிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், நடை பவனியாக, திருகோணமலை மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சென்றடைந்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்ததைப் போன்று, மிகவிரைவில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டுமெனக் கோரி, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், இதில் 250க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டகாரர்கள் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதேவேளை, இவ்வார்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமே, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஆரியவதி காலப்பதி, குச்சவெளிப் பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ. எஸ். எம். சாஜித் , மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளின் ஆதரவாளர்கள், கட்சி உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
Post Top Ad
Sunday, November 25, 2018
நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு திருமலையில் ஆர்ப்பாட்டம்
Tags
Sri lanka#
Trincomalle#
Share This
About vettimurasu
Trincomalle
Tags:
Sri lanka,
Trincomalle
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.