Breaking

Post Top Ad

Monday, November 26, 2018

ஜனாதிபதியின் தடுமாற்றத்தால் திசை­மா­றி­யுள்­ள ஜன­நா­யகம் -மட்டு. பிர­ஜைகள் அபி­வி­ருத்தி மையம்

(தாம­ரைக்­கேணி நிருபர்)                


எமது நாட்டில் ஜன­நா­யகப் பாரம்­ப­ரி­யங்­களை அடி­யொட்­டியே ஆட்சி நடத்­தப்­பட்டு வந்­துள்­ளது. எனினும் அண்­மைக்­கா­ல­மாக ஒரு­வித தடு­மாற்­றப்­போக்­குடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேற்­கொண்ட சில செயற்­பா­டு­களால் ஜன­நா­யகம் என்­பது பாதை­யை­விட்­டு­வி­லகி திசை­மாறிச் செல்­வது தெளி­வாகத் தெரி­கி­றது. நாடு சீர­ழிந்தால் அதனை மீண்டும் கட்டி எழுப்­பு­வது மிகச் சிர­ம­மா­னது. இதனை உணர்ந்து அர­சியல் கட்­சி­களும் தலை­மை­களும் பொருத்­த­மான முடிவை மேற்­கொள்ள வேண்டும் என்று மட்­டக்­க­ளப்பு பிர­ஜைகள்  அபி­வி­ருத்தி மையத்தின் தலைவர் கலா­நிதி ஏ. செல்­வேந்­திரன் தெரி­வித்தார். 

மட்­டக்­க­ளப்பு பிர­ஜைகள்  அபி­வி­ருத்தி மையத்தின் சம­கால அர­சியல் நிலை­மை­களை ஆராயும்  கலந்­து­ரை­யா­ட­லொன்று தலைவர் கலா­நிதி செல்­வேந்­திரன் தலை­மையில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை மட்­டக்­க­ளப்பில் இடம்­பெற்­றது. அதில் கலந்து கொண்டு பேசும்­போது இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில்,

சுய­வி­ருப்பம், அள­வு­க­டந்த அதி­காரம், உயர் பத­வி­நிலை இருந்­தாலும்  நாட்டின் ஜனா­தி­பதி எனும் நபர் ஜன­நா­யகப் பண்­பு­களை விட்டு விலகிச் செல்லக் கூடாது. நாடு மிகப் பார­தூ­ர­மான சூழலில் இருந்த வேளை பொது வேட்­பா­ள­ராக தன்னை மாற்­றிக்­கொண்டு தேர்தல் களத்தில் குதித்த ஜனா­தி­பதி மைத்­திரி இன்று ஜன­நா­யகக்  கோட்­பா­டு­களை புறந்­தள்ளி நடப்­பது. ஆச்­ச­ரி­யமா­னது. அவரை எது மாற்­றி­யது? ஏன் மாறினார்? என்­பது எல்­லோ­ரதும் கேள்­வி­யாகி  நிற்­கி­றது.பாரா­ளு­மன்ற பாரம்­ப­ரி­யத்­தையும் அத­னது பிர­தி­நி­தி­களின் தீர்­மா­னங்­க­ளையும் அவர் புறந்­தள்­ளி­யி­ருக்­கிறார். பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மானம் தொடர்பில் அவர் நடு­நி­லை­யாக செயற்­பட்­டி­ருக்­க­வில்லை.

பாரா­ளு­மன்­றத்தை அவர் சாதா­ரண சமூக சேவை நிலை­ய­மாக மதிக்­கி­றாரா?  பாரா­ளு­மன்றம் இந்த நாட்டு மக்­க­ளினால் தெரிவு செய்­யப்­பட்ட மக்கள் பிரதி நிதி­களைக் கொண்ட சட்­ட­வாக்க சபை­யாக மதிக்­கின்­றாரா என்ற கேள்­வியும் எழு­கி­றது.

சிறு எண்­ணிக்­கை­யி­லான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை தன் பக்­கத்தில் வைத்­தி­ருக்கும்  பிர­தமர் மஹிந்த  எவ்­வாறு பிர­தமர் பத­வியை வகிக்க முடியும்?.  இதை மஹிந்­தவும், மைத்­தி­ரியும் ஏற்க மறுப்­பது ஏன்?

தினேஸ் குண­வர்த்­தன, விமல் வீர­வன்ஸ போன்றோர் மஹிந்­தவை ஒட்டிக்கொண்­டால்தான் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக முடியும் அவர்­க­ளது கட்­சி­களில் தனித்து நின்று போட்­டி­யிட்டால் கட்­டுக்­கா­சையும் இழப்­பார்கள். இப்­ப­டி­யா­ன­வர்­க­ளுக்கு  அர­சி­யலில் சரித்­திரம் கிடை­யாது.  மஹிந்த நாட்டை படு­பா­தா­ளத்­திற்கு  தள்­ளி­யவர்  ”புலி­களை வென்றேன்” என்று சொல்­வ­தைத்­த­விர  வேறு எதுவும் அவ­ரிடம் இல்லை.

”சம்­பந்தன் ஐயாவின்” ஸ்திர­மான,  காலத்­தி

ற்கு ஒத்த முடி­வு­களை, மக்கள் பாராட்டுகி றார்கள். பாராளுமன்ற உறுப்பினர்  சுமந்திரனின் சட்டத்துறை அனுபவம் எமது மக்களின் மனத் திற்கு  ஒத்தடம் கொடுத்துள்ளது என்றார்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages