Breaking

Post Top Ad

Thursday, November 1, 2018

ஆசிரியர்களுக்கு ஓர் முக்கிய எச்சரிக்கை: மீறினால் கடும் சட்ட நடவடிக்கை

ஞாயிற்றுக்கிழமைகளில், காலை தொடக்கம் மதியம் 12 மணி வரை சமயப்பாடசாலைகள் தவிர்ந்த வேறு எதுவித பிரத்தியேக மற்றும் பாடசாலை வகுப்புக்கள் பாடசாலைகளிலும் டியூசன் நிலையங்களிலும் நடைபெறக்கூடாது என கிழக்குமாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகம கட்டளை பிறப்பித்துள்ளார்.



இதுகுறித்து தகவலை அவர் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டம் ஒன்றின் போதே தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த அறிவுறுத்தலினை மீறி ஞாயிறு காலை வகுப்பு நடாத்துபர்களிற்கு எதிராக பல ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஆசிரியர் ஒருவர் இவ்வாறு பிரத்தியேக பாடம் ஒன்றினை நடத்தியது உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கு ஐந்து வருடங்களுக்கு மிகவும் தூரமான இடத்திற்கு இடமாற்றம் வழங்கும் என தெரிவித்துன்னார்.

அத்தோடு, இவ்விடையத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிஸ் அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டார்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages