Breaking

Post Top Ad

Thursday, November 22, 2018

இலங்கை விடயத்தில் குறுக்கிடவேண்டாம்; பிரித்தானியாவிடம் கோரிக்கை!

ஸ்ரீலங்காவின் உள்விவகாரங்களில் குறுக்கீடு செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு தொழில்சார் தேசிய முன்னணி (The Professional’s National Front) பிரித்தானியாவிடம்கோரிக்கை விடுத்துள்ளது.

ஸ்ரீலங்காவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவ்ரிஸ்க்கு (James Dauris) அனுப்பியுள்ள கடிதத்திலேயே தொழில்சார் தேசியமுன்னணி, இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

அத்துடன்,பிரித்தானியாவின் இந்த செயற்பாடானது வியன்னா மாநாட்டின் கட்டுரை நாற்பத்தொன்றை மீறுவதாக அமைந்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யக்கூடாது என, வியன்னா மாநாட்டின் கட்டுரை, நாற்பத்தொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன்,விடுவிக்கப்பட்ட நாட்டின் எந்தவொரு ஒப்பந்தங்களும் தொடர்புகளும்அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படவேண்டும் என, மாநாட்டின் கட்டுரை நாற்பத்தொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தொழில்சார் தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages