கலிபோர்னியாவில் செல்பி மோகத்தால் இந்திய ஜோடி ஒன்று 800 அடி மலை உச்சியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்த தம்பதியர்களான விஷு விஸ்வநாத் மற்றும் மீனாட்சி அமெரிக்காவில் வசித்து வந்தனர். விஷூ விஸ்வநாத் அங்குள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் த்ரில்லான இடங்களுக்கு சென்று அங்கு செல்பி எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிடுவது ரொம்ப பிடிக்குமாம். அதுவே இன்று அவர்களின் உயிரை பறித்துவிட்டது.
இருவரும் விடுமுறை நாட்களில் தவறாமல் சுற்றுலா செல்வது வழக்கமாம். அப்படி சமீபத்தில் கலிஃபோர்னியாவில் உள்ள யோசெமைட் தேசிய பூங்காவுக்கு சுற்றுலா சென்று 800 அடி மலைப்பகுதியின் நுனியில் ஆபத்தான நிலையில் செல்பி எடுத்துள்ளனர். அப்போது கால் தவறி கீழே விழுந்ததில் இருவரும் சம்பவ இடத்திலே பலியாகி உள்ளனர்.
அவர்களின் உடல்களை மீட்ட பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.