Breaking

Post Top Ad

Monday, October 1, 2018

ஸ்ரீ லஷ்மி நாராயண ஆலய பரிவார மூர்த்திகளின் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா ஆலங்கேனி ஸ்ரீ லஷ்மி நாராயண ஆலய பரிவார மூர்த்திகளின் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு திங்கட்;கிழமை இடம்பெற்றது.

கிண்ணியா நகரசபை உறுப்பினர் சி.பஞ்சலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஸ்ரீ லஷ்மி நாராயண ஆலயம் மற்றும் வாழைச்சேனை பேத்தாழை ஸ்ரீ முருகன் ஆலய நிருவாக சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


புலம்பெயர் நாட்டில் வாழும் ரெட்ணசிங்கம் பன்னீர்செல்வம் என்பவரின் நிதிப் பங்களிப்பில் பரிவார மூர்த்திகளான பிள்ளையார் மற்றும் நவக்கிரங்களுக்கான ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதன்போது வாழைச்சேனை பேத்தாழை ஸ்ரீ முருகன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.ரதிகர சர்மா தலைமையில் கிரியைகள் மற்றும் பூசைகள் என்பன இடம்பெற்றது.









No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages