மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுகோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, ஞாயிறுக்கிழமை 21ஆம் திகதி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு நகர் காந்திபூங்கா முன்பாக, தோட்டத்தொழிலாளர்களின் 1000ரூபா சம்பள உயர்வினை வழங்க கோரி, மட்டக்களப்பு இளைஞர்களும் பொது அமைப்புக்களும் இணைந்தே இந்த ஆர்ப்பாட்டத்தினை ஒழுங்கு செய்திருந்தனர்.
"அடிப்படை வசதி இல்லை அடிப்படை சம்பளம் இல்லை அடிமைகளா நாம்?", தோட்டத் தொழிலாளர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கொடு", எங்களை வாழவிடு- மலையக மக்களை வாழவை", "அரசே தாமதிக்காது மலைய தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்து" , "மலையக மக்களை படுகிழிக்குள் தள்ளாதே" , "தோட்டத் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே" போன்ற கோசங்களை எழுப்பியும் பதாதைகளை ஏந்தியவாறும் மக்கள் இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இப் போராட்டத்தில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இளைஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.