Breaking

Post Top Ad

Friday, October 26, 2018

கோறளைப்பற்று பிரதேச சமூகசேவைத் திணைக்களத்தினால் கலைஞர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் 'பற்று' சஞ்சிகை வெளியீடு

(ஜெ.ஜெய்ஷிகன்)      
சமூகசேவைத் திணைக்களத்தின் சேவைகளை ஆவணப்படுத்துவதும் பிரதேச கலைஞர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் நல்லதொரு முயற்சி 'பற்று' சஞ்சிகை வெளியீட்டில் சிரேஸ்ட்ட சமூகசேவை உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அலியார் தெரிவிப்பு

கோறளைப்பற்று- வாழைச்சேனை பிரதேசசெயலகம் மற்றும் சமூகபராமரிப்பு நிலையத்தின் வெளியீடான 'பற்று' சஞ்சிகை வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக வெளியீடு செய்யப்பட்டது.

உதவிப்பிரதேச செயலாளர் திருமதி. நிருபா பிருந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் 'பற்று' சஞ்சிகையையும் வெளியீட்டு வைத்ததுடன்  விசேட அதிதிகளாக தலைமையக சிரேஸ்ட சமூகசேவை உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அலியார் மற்றும் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் சா.அருள்மொழி, சமூகசேவை உத்தியோகத்தர்களான அ.நஜீம், திருமதி.சி.சிவநாயகம், மாவட்ட செயலக முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் விஸ்வகோகிலன் ஆகியோருக்கு பற்று சஞ்சிகையின் முதற் பிரதிகளை சம்பிரதாயபூர்வமாக வழங்கியிருந்ததும் குறிப்பிடத் தக்கது.
பிரபல எழுத்தாளர் கறுவாக்கேணிமுத்து மாதவன் 'பற்று' சஞ்சிகையின் நயவுரையை நிகழ்த்தினார்.

சமூகசேவைத் திணைக்களத்தின் சேவைகளை ஆவணப்படுத்துவதும் பிரதேச கலைஞர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் நல்லதொரு முயற்சியாக 'பற்று' சஞ்சிகை வெளிவருவது பாராட்டுக்குரியது என சிரேஸ்ட்ட சமூகசேவை உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அலியார் தனதுரையில் சுட்டிக்காட்டினார்.







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages