மட்டக்களப்பு மாவட்ட வரலாற்றில் முதன்தடவையாக “ஐஸ்” எனப்படும் புதிய ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதென, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி பொடி பண்டார தெரிவித்தார்.
பாசிக்குடா ஹோட்டல் ஒன்றிலிருந்து நவீன கார் ஒன்றிலே சூட்சுமமான முறையில் பதுக்கிவைத்தும்,பாதுகாப்புடன் குறித்த ஐஸ் போதைப்பொருளைக் கடத்திவந்த நிலையில் காத்தான்குடி குட்வின சந்தியில் வைத்து, மூன்று இளைஞர்களை செவ்வாய்க்கிழமை (30) காலை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருளை கடத்தி வந்து கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள், மட்டக்களப்பையும், பாசிக்குடாவையும் சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த நபர்கள் கடத்தலுக்குப் பயன்படுத்திய சொகுசுக் காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கில் போதைப்பொருள் அதிகரித்துள்ள நிலையில் மாணவர்களுக்கும்,ஏனையோருக்கும் போதைப்பொருளை ஊட்டி எப்படியோ சமுதாயத்தை அழிக்கும் நோக்கில் பல பணம்படைத்தவர்கள் ஆடம்பர வாகனங்களுடன் நடமாடுவதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. இவ்வாறானவர்கள் ஐரோப்பிய நாடுகளில் உழைத்து வந்து இவ்வாறான போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
சந்தேகநபர்கள் மூவரையும், மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகக் தெரிவித்த காத்தான்குடி பதில்-பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இச்சம்பவதுடன் தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.