இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர் மாநாடு மற்றும் இளைஞர் பரிமாற்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் இலங்கை குழுவில் கிழக்கு மாகாணப் பிரதிநிதியாக சம்மாந்துறையைச் சேர்ந்த முஹம்மட் நிப்ராஸ் தெரிவாகியுள்ளார்.
இளைஞர் விவகார அமைச்சின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இக்குழு எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி புதன்கிழமை இந்தியா நோக்கி பயணிக்கவுள்ளதுடன் 8 நாட்கள் அங்கு தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளது.
26 பேர் கொண்ட இக்குழுவில் இடம்பெற்றுள்ள மூன்று முஸ்லிம்களில் கிழக்கு மாகாண பிரதிநிதியாக சம்மாந்துறைச் சேர்ந்த நிப்ராஸ் தெரிவாகியுள்ளார். தொழில்நுட்ப பொறியியலாளரான இவர் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சில் பணியாற்றி வருகின்றார்.
அத்துடன், சம்மாந்துறை கைன்ட்ஸ் 21 இளைஞர் கழகத்தின் தலைவராகவும்இ சம்மாந்துறை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் கலாச்சார பிரிவுக்கான அமைப்பாளராகவும் செயற்படுகின்ற இவர் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post Top Ad
Saturday, October 6, 2018
Home
Ampara
Sri lanka
இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர் மாநாட்டில் கிழக்கு மாகாண பிரதிநிதியாக சம்மாந்துறை நிப்ராஸ் பங்கேற்பு
இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர் மாநாட்டில் கிழக்கு மாகாண பிரதிநிதியாக சம்மாந்துறை நிப்ராஸ் பங்கேற்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.