கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகளே இந்தச் சம்பவத்தில் தொடர்புபட்டுள்ளனர்.
பாடசாலை செல்வதாகக் கூறி வீட்டை விட்டு சென்ற மாணவிகள் இருவர், காதலர்களுடன் மீகொட பொலிஸ் பிரிவிலுள்ள ஒரு மாணவியின் வீட்டுக்குச் சென்று தகாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஒரு மாணவி மற்றும் அவரது காதலனை மீகொட பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவர் வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளார் எனச் சட்ட மருத்துவர் தெரிவித்துள்ளார்.
ராஜகிரிய பிரதேச பாடசாலையில் கல்வி கற்கும் இந்த மாணவிகள் இருவர் அந்த பிரதேச பாடசாலை மாணவர்கள் இருவருடன் காதல் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.
இந்தச் சந்தர்ப்பத்தில் மாணவியின் தந்தை திடீரென வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வீட்டினுள் யாரோ இருப்பதனை அவதானித்த தந்தை வீட்டுக்குப் பின்னால் மறை ந்திருந்து பார்த்துள்ளார். திடீரென கதவை திறந்த போது மாணவியின் காதலன், தந்தையைத் தாக்கிவிட்டுக் காதலியை அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளார். அவ்வாறு சென்றவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடை க்கவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை களை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.