இளம் பராயத்தினர் உளவளம் நிறைந்த அறிவைப் பெற்று சமூகத்தில் முன்மாதிரியானவர்களாக திகழ்வதற்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் சிறந்த வழிகாட்டல் பயிற்சிகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இவ்வாரு மட்டக்களப்பு சர்வதேச உளவியல் கல்வி நிருவனத்தின் உள சமூக வலுவூட்டல் வளவாளர் எஸ்.பிரான்விஸ் கூறினார்.
மட்டு.ஜோசப்வாஸ் வித்தியாலய உளநல செயற்பாட்டு குழாமினால் உலக மனநல தினத்தை முன்னிட்டு இளம் 'பராயத்தினரும் மன நலமும்' எனும் தொளிப்பொருளில் வழிகாட்டல் ஒன்று கூடல் நிகழ்வு அதிபர் சுதாகரன் தலமையில் நடைபெற்றது. அதில் வளவாளராக கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு பிரான்சிஸ் தொரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்.
பொதுவாக அனைவரிடமும் காணப்படும் ஒரு விடயமாகவே மன அழுத்தம் உள்ளது. இதனை நீக்கிக் கொள்ளவே அனைவரும் விரும்புகின்றனர். இந்த மன அழுத்தம் என்ன என்று சரியாகப் பார்க்கும்போது அது எமக்கு மன அமைதியை ஏற்படுத்தி வெற்றி பெறுவதற்கு ஒரு ஆசீர்வாதமாக மாறுகின்றது. ஆனால் அதனை பலரால் சரியாக விளங்கிக் கௌ;ள முடிவதில்லை. அதனால் மன அழுத்தம் அதிகரிப்பதை காணக்கூடியதாக உள்ளது.
பிரச்சினைகள் மன அழுத்தமாக மாறும்போது அது எரிச்சலாக மாறி நாளாந்த வேலைகளில் அசாதாரன மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக சூழலையும் எண்ணத்தையும் இளம் பராயமுடைய மாணவராகிய நீங்கள் சரியாக விளங்கிக் கொண்டால் ஆரம்பத்திலேயே அதனை மாற்றிக் கொள்ள முடியும்.
அவ்வாறு செய்து கொள்ள தவறும்போது மனதை ஒரு நிலைப்படுத்தி படிக்க முடியாமை, தூக்க குழப்பம், இதயத்துடிப்பு அதிகரித்தல், ஒய்வுடன் இருக்க முடியாமை, அதிக மூச்சு வாங்குதல், தலை சுற்றுஇ சமிபாட்டு பிரச்சனைகள் போன்ற பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
எனவே மன அழுத்தத்தின் அளவை நாம் இனம் கண்டு அதனை சரியான முறையில் கையாளும் போது எமது செய்கை அரம்பம் தொடக்கம் முடிவுவரை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மற்றவர்கள் புரியும் வகையில் மன அழுத்தத்தை கையாளுவதே மிகவும் புத்திசாலித்தனமாகும். நூற்றுக்கு நூறு விகிதம் தோல்விகள் சரியாக வெற்றியைத்தர வேண்டும் என்று நினைக்கக்கூடாது. தோல்விகளை எதிர் கொள்ளும் திரனிலும் புத்திசாதுரியம் தேவை என்றார்.
அதிபர் சுதாகரன் பேசியதாவது.
உள நல கோளாறு காரணமாகவே ஆரோக்கியமற்ற செயற்பாடுகள் இன்று சமூகத்தில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. பல பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வாக உயிரை மாய்த்துக் கொள்ளும் பரிதாப நிலையை இன்று நாம் காண்கின்றோம். இதே வேளை மனரீதியான நோய்கள்இ பிரச்சினைகள் போன்றவற்றை கண்காணிக்க வேண்டிய தேவைப்பாடும் அதிகரித்துள்ளது.
எனவே இளம் பராயத்தினரின் உளவளம் தொடர்பில் ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு பயிற்சிகளை வழங்குதற்கு செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன் என அவர் தொரிவித்தார்.
அருட் தந்தை பிறைனர் அடிகளார் உரையாற்றுகையில்.
மனநலம், உடல்நலம், சமூகநலம், பொருளாதாரவளம் ஆகியவற்றை பாதிக்கும் அளவுக்கு மதுப்பழக்கத்திற்கு உள்ளாகி பின்னர் அதனை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். அத்தோடு குடற்குண்இ கல்லீரல் பாதிப்பு, இதய நோய் எற்பன ஏற்படுவதுடன் மது உடலினுள் சென்று தாதுப் பொருட்களையும் எரித்து விடுகின்றன. இதனால் விற்றமின்இ தாதுப் பொருட்களின் அளவு குறைந்து மன, உடல் ரீதியாக நிரந்தர மன நோயாளியாக மாறுகின்றனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.