Breaking

Post Top Ad

Saturday, October 13, 2018

வல்லப்பட்டையுடன் தன்னாமுனையில் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில்  முச்சக்கர வண்டியில் ஒரு தொகுதி வெல்லம்பட்டை கொண்டுசென்ற ஒருவர் வெள்ளிக்கிழமை (12) மாலை மட்டக்களப்பு தன்னாமுனையில வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் என ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த முச்சக்கரவண்டியைச் பொலிஸார் சேதனையிட்ட போது 280 கிறாம் வெல்லம்பட்டை கைப்பற்றப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட புலனாயப்புப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றினையடுத்து பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எஸ்.எஸ். சமந்த மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆர்.புருசோத்மன் ஏறாவூர் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பி.பி.ஸ்.நிறோசன் பெனர்ன்டோ மற்றும் பொலிஸார் ஆகியோர் அடங்கிய குழு மேற்கொண்ட நடவடிக்கையின் போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன.


வவுணதீவு பாவற்கொடிச்சேனையிலிருந்து செங்கலடி நோக்கி சென்ற முச்சக்கரவண்டியில் மிக நுட்பமான முறையில் மறைத்துவைக்கப்பட்டு கொண்டு கொண்டுசெல்லும் போது தன்னாமுனையில் வழிமறித்த பொலிஸார் இவற்றைக் கைப்பறியுள்ளனர்.


குறித்த சந்தேக நபரை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதி மன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கையெடுத்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தார்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages