மட்டக்களப்பு- புல்லுமலை வட்டார வன காரியாலய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத்தகவலையடுத்து வவுணதீவு, தாண்டியடி விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் இந்த இம்மரக்கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.
மரக்கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லொறி மற்றும் இரண்டு உழவு இயந்திரங்களுடன் 34 தேக்கு மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சாரதிகள் உள்ளிட்ட சந்தேக நபர்கள் தப்பியோடிவிட்டதாக வட்டார வன காரியாலய அதிகாரி என். நடேசன் தெரிவித்தார்.
விசேட அதிரடிப்படை கட்டளையதிகாரி அப்துல் லத்தீபின்; பணிப்புரைக்கமைவாக பிராந்திய கட்டளையதிகாரி மாலன்தீசேராவின் வழிகாட்டலில் தாண்டியடி கட்டளையதிகாரி எம்.எம்.என்கே. மாரசிங்க தலைமையிலான குழுவினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.