சர்வதேச அரிமாக் கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய கழகங்களின் அனுசரணையுடன் மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்கம் ஏற்பாட்டில் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வு மட்டக்களப்பு உப்போடை துளசி மண்டபத்தில் நடைபெற்றது.
இதனையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலமானது மட்டக்களப்பு கல்லடி பாலம் அருகில் இருந்து ஆரம்பமாகி - கல்முனை பிரதான வீதி ஊடாக கல்லடி உப்போடை துளசி மண்டபம் வரை ஊர்வலம் நடைபெற்றது.
இடம்பெற்ற ஊர்வலத்தை தொடர்ந்து வெள்ளைப்பிரம்பு தினத்தை சிறப்பிக்கும் வகையில் விசேட நிகழ்வுகள் உப்போடை துளசி மண்டபத்தில் நடைபெற்றது.
நடைபெற்ற ஊர்வலத்திலும் ,நிகழ்வுகளிலும் மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் , மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் , மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம் .தயாபரன் ,மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ் .அருள்மொழி ,மாவட்ட பிராந்திய அரிமாக் கழக உறுப்பினர்கள் , உதயம் விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்கள் பாடசாலை மாணவர்கள் . ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , உட்பட பலர் கலந்துகொண்டனர்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.