மட்டக்களப்பிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் பிறந்த நாள் நிகழ்வைக் கொண்டாடி சொக்கலேற் உட்கொண்ட 8 மாணவர்கள் சுகவீனமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்து தற்சயம் உடல்நிலை தேறி வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, கடந்த வெள்ளிக்கிழமை 12.10.2018 மேற்படி பிரபல ஆண்கள் பாடசாலையில் பிறந்த நாள் மகிழ்ச்சியைக் கொண்டாடிய மாணவர் ஒருவர் தனது சக மாணவ நண்பர்களுக்கு சொக்கலேற்களை வழங்கியுள்ளார்.
பிறந்த நாள் பரிசாக இவ்விதம் சொக்கலேற் உட்கொண்ட 42 மாணவர்களில் 8 பேர் உடல் அசௌகரியத்துக்குள்ளான நிலையில் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
தீவிர கண்காணிப்பின் கீழ் சிகிச்சையளிக்கப்பட்ட மாணவர்கள் உடல்நிலை தேறிய நிலையில் சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவன் வாங்கிய சொக்கலேற் அதன் காலாவதித் திகதி முடிவடையாத நிலையில் இருந்ததாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்திருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
Post Top Ad
Sunday, October 14, 2018
Home
Batticaloa
Sri lanka
சொக்கலேற் உட்கொண்டதால் சுகவீனமுற்று சிகிச்சை பெற்றுவந்த மாணவர்கள் வீடு திரும்பினர்
சொக்கலேற் உட்கொண்டதால் சுகவீனமுற்று சிகிச்சை பெற்றுவந்த மாணவர்கள் வீடு திரும்பினர்
Tags
Batticaloa#
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Batticaloa,
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.