Breaking

Post Top Ad

Friday, October 26, 2018

பௌத்த பிக்குவுக்கு எதிராக அரச உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பௌத்த பிக்குவால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அரச உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பில் சுதந்திரமாக கடமையாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று ​நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இவ் ஆர்ப்பாட்டமானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன்னால் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.”


அரச நிருவாக அதிகாரிகளை அச்சுறுத்தும் செயல்களை வன்மையாக கண்டிக்கின்றோம்” எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.


“மதகுருவே புத்தபெருமானின் போதனை வன்முறையா, மதகுருவே அரச ஊழியர்களை துன்புறுத்தாதே, மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு என்ன, நேற்று கிராமசேவையாளர் இன்று பிரதேச செயலாளர், நாளை யார்?, நல்லாட்சி அரசாங்கமே வடகிழக்கில் உள்ள அரச உத்தியோகத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்” போன்ற சுலோகங்களைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இவ்விடயமாக மட்டக்களப்பு நிருவாகசேவை சங்கத்தினரால் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

கடந்த செவ்வாய்கிழமை, மட்டக்களப்பு மயிலம்பாவெளியிலுள்ள தனியார் காணியொன்றுக்குள் நின்றிருந்த அரசமரமொன்றின் கிளைகளை அக்காணியின் உரிமையாளர் வெட்டியமைக்கு மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிடியே சுமனரத்ன தேரரர் எதிர்ப்புத் தெரிவித்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பாக சமரசம் செய்வதற்காக குறித்த இடத்திற்குச் சென்ற ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட அம்பிடியே சுமணரெத்த தேரர் அவரை பொலிஸார் முன்னிலையில் தாக்குவதற்கு முயன்றமை குறிப்பிடத்தக்கது





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages