Breaking

Post Top Ad

Wednesday, October 31, 2018

சட்டவிரோதமாக கடத்திவந்த மாடுகளும் மரக்குறிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.



மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ்பிரிவில் சட்டவிரோதமான முறையில் எடுத்துச் சென்ற மாடுகளும் ஒருதொகை அறுவை மரக்குற்றிகளையும் புதன்கிழமை (31ம் திகதி) அதிகாலை வவுணதீவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


வவுணதீவில் இடம்பெற்ற விசேட சோதனை நடவடிக்கையின்போது,  மேற்படி கைப்பற்றல் சம்பவம் இடம்பெற்றதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.நிசாந்த அப்புகாமி தெரிவித்தார்.


இந் நடவடிக்கை, வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.நிசாந்த அப்புகாமி தலைமையில் உதவி பொலிஸ் பரிசோதகர் ஆரியசேன, பி.புனிதகுமார், வை.வி.கஷீர், பி.எஸ்.விஜிதகுமார, ஆர்.நந்தராஜபக்ச, எஸ்.மனோகரன், எம்.சாஜகான் ஆகிய பொலிஸ் அதிகாரிகள் இணைந்து  மேற்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


படுவான்கரை பிரதேசத்திலிருந்து  காத்தான்குடி, மட்டக்களப்பு போன்ற பகுதிகளுக்கு  அதிகமாக  மாடுகள் கடத்தப்படுவதாக பல தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தம்மால் இந்த கடத்தல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளதாக  வவுணதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி  கே.டி.நிசாந்த அப்புகாமி தெரிவித்தார்.


கைப்பற்றப்பட்ட  அறுவை மரக்குற்றிகள், மாடுகள் மற்றும் வாகனம் போன்றவற்றுடன் இரு நபர்களையும் நீதிமன்றில் இன்று புதன்கிழமை 31ஆம் திகதி ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும், இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வவுணதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages