வாவியோர நடைபாதை மற்றும் கூடாரம் (கபானாக்கள்) அமைக்கும் வேலைகளில் ஊழல் இடம்பெற்றதாக மாநகரசபை உறுப்பினர் கிளனி வசந்தகுமார் அவர்களால் முன்னைய அமர்வில் தெரிவிக்கப்பட்டமை தொடர்பில் மாநகரசபை உறுப்பினர் கு.காந்தராஜா அவர்களினால் மாநகரசபையின் 10வது அமர்வில் கோரப்பட்ட விளக்கத்திற்கான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தனது விளக்கவுரையில் மேலும் தெரிவிக்கையில்,
நகர வீடமைப்பு மற்றும் பொறியில் அமைச்சானது பிரேமதாஸ அவர்களின் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதனூடாகத் தான் சகல ஒப்பந்த வேலைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒப்பந்த விதிகளின் படி மூன்று விதமான ஒப்பந்தங்களை நாங்கள் மேற்கொள்ள முடியும். சர்வதேச ஒப்பந்தம், திறந்த உள்நாட்டு ஒப்பந்தம் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்தினூடாக 20 இலட்சத்திற்கு மேற்படாத வேலைத்திட்டங்களை மேற்கொள்வது. திறந்த உள்நாட்டு ஒப்பந்தம் பகிரங்க கேள்விக் கோரல்கள் மூலம் இடம்பெறும். ஒதுக்கப்படுகின்ற நிதி எந்த அமைச்சினூடாக ஒதுக்கப்படுகின்றது, அதனை நடைமுறைப்படுத்துகின்ற அமைப்பு அல்லது நிறுவனம் இது தொடர்பான எந்தவிதமான விளக்கங்களும் அந்தச் செயற்திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.
பணம் கைமாற்றல் மட்டும் தான் ஊழல் என்றில்லை. சரியான நிருவாக நடைமுறைகளை மேற்கொள்ளமல் விடுவதும் ஒருவகையான ஊழல் தான். எமது வாவியோரத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் (கபானாக்கள்) தொடர்பில் எவ்விதமான பெயர்ப்பலகையோ, திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியோ, திட்டத்தை நடைமுறைப்படுத்திய நிறுவனமோ குறிப்பிடப்படவில்லை. இதில் மேலும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர்கள் அந்தத் திட்டத்தை மாநகர சபைக்கு ஒப்படைத்திருக்க வேண்டும். அதவம் செய்யப்படவில்லை.
எமது மாநகரசபை எல்லைக்குள் மேற்கொள்ளப்படுகின்ற எந்தத் திட்டமாக இருந்தாலும் அதைப் பராமரிக்கின்ற இடமாக மாநகரசபை இருக்கின்றது. இன்றைக்கு பராமரிப்பற்ற அநாதையாக அந்தத் திட்டம் இருக்கின்றது. அது நகரை அழகுபடுத்தும் திட்டம் என செயற்படுத்தப்பட்டிருந்தாலும் தற்போது நகர அழகைக் குலைக்கும் பார்வைக்குரிய ஒரு இடமாகக் காணப்படுகின்றது. காரணம் உரிய நிருவாக நடைமுறை அங்கு மேற்கொள்ளப்படவில்லை.
இது மட்டுமல்ல இதுபோன்ற பல திட்டங்கள் அன்றைய காலப்பகுதியில் முறையற்ற முறையில் சரியான கண்காணிப்பற்ற விதத்தில் நடந்துள்ளது என்பதையே நான் குறிப்பிட்டேன். எனவே இவ்விடயத்தை மாநகர சபை உறுப்பினர் காந்தராஜா அவர்கள் அவர்களின் கட்சி சார்பில் இதனைப் பொறுப்பேற்றமையை வரவேற்கின்றேன் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.