Breaking

Post Top Ad

Tuesday, October 16, 2018

சமூக வலுவூட்டல் மற்றும் மீள் இணைத்தல் ஊடாக பாடசாலை இடைவிலகலைக் குறைத்தல் எனும் தொனிப்பொருளிலான பயிற்சிப் பட்டறை

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் 'சமூக வலுவூட்டல் மற்றும் மீள் இணைத்தல் ஊடாக பாடசாலை இடைவிலகலைக் குறைத்தல் எனும் தொனிப்பொருளிலான பயிற்சிப் பட்டறை நிகழ்வு நேற்றைய தினம் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் திருமதி பே.ரேணுகாதேவி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் எ.ஆர்.எம்.ருசைட் மற்றும் வளவாளர் சி.சிறிதரன் மற்றும் பிரதேசத்தின் இடைவிலக் நிலையிலுள்ள மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இப்பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இடைவிலகல் மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் இப்பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டு பயனடைந்ததுடன், மாணவர்களின் நிலையினைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், புத்தகப் பைகள் மற்றும் பாதணிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.









No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages