Breaking

Post Top Ad

Friday, October 26, 2018

'முதியோர்களின் உள்ளார்ந்த ஆற்றல்களுக்கு' களம் அமைத்த கோறளைப்பற்று பிரதேச செயலக முதியோர் தின விழா

(ஜெ.ஜெய்ஷிகன்)      

கோறளைப்பற்று- வாழைச்சேனை பிரதேசசெயலகம் மற்றும் பிரதேச முதியோர் சம்மேளனம் இணைந்து நடாத்திய சர்வதேச முதியோர் தின விழா வெள்ளிக்கிழமை (23) பிற்பகல் வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.



பிரதேச முதியோர் சம்மேளனத்தின் தலைவர் கந்தையா நடேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி. நிருபா பிருந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக தலைமையக சிரேஸ்ட சமூகசேவை உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அலியார் மற்றும் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் சா.அருள்மொழி, சமூகசேவை உத்தியோகத்தர்களான அ.நஜீம், திருமதி.சி.சிவநாயகம், அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன், மாவட்ட செயலக முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் விஸ்வகோகிலன், சமுர்த்தி முகாமையாளர் மு.கலாதேவன், உளவளத்துணை உதவியாளர் திருமதி.நிமால், கறுவாக்கேணி சமூக பராமரிப்பு நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் கிராமசேவை உத்தியோகத்தர்கள், கிராம மட்ட முதியோர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

'மனித உரிமைகளுக்காக முன்னின்ற மூத்த பிரஜைகளை கௌரவிப்போம்' என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற இந் நிகழ்வில் முதியோர்களின் உள்ளார்ந்த ஆற்றல்களை வெளிக் கொணரும் வகையிலான பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. அத்துடன் நாசிவன்தீவு பிரதேசத்தில் 96 வயதிற்கு மேற்பட்ட சிறந்த சிரேஸ்ட்ட பிரiஐக்கான கௌரவிப்பு மற்றும் அதிக பிள்ளைகளை ஈன்ற தாய்க்கான கௌரவிப்பும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சமூகமளித்த அனைத்து சிரேஸ்ட்ட பிரiஐகளுக்கும் நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் கவனிக்கத்தக்கது.








No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages