சென்னையில் பொலிஸார் ஒருவரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையை சேர்ந்தவர் விக்னேஷ்(25). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக என்ஜினியரிங் பட்டதாரியான லட்சுமி (24) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
சென்னை பெருநகர போலீஸ் ஆயுதபடையில் பணியாற்றி வரும் விக்னேஷ், நேற்று பணி முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
பூட்டியிருந்த வீட்டின் கதவை நீண்ட நேரமாக தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளார். அங்கு மின்விசிறியில் தூக்கிட்டபடி லட்சுமி சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனே பொலிஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் லட்சுமியி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், லட்சுமியை வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக அவருடைய அப்பா ராமசாமி புகார் அளித்தார்.
மேலும் இந்த தம்பதியினருக்கு 1 வயதில் குழந்தை இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதன்பேரில் தற்போது பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Post Top Ad
Wednesday, October 10, 2018
Home
Sri lanka
world
பூட்டிய வீட்டில் சடலமாக தூக்கில் தொங்கிய மனைவி: பொலிஸ் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி
பூட்டிய வீட்டில் சடலமாக தூக்கில் தொங்கிய மனைவி: பொலிஸ் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.