Breaking

Post Top Ad

Tuesday, October 2, 2018

நர்த்தன நிவேதன பரதநாட்டிய ஆற்றுகை விழா

(வரதன்)

கலைக்கோகிலம் வழங்கும் நர்த்தன நிவேதனம் பரத நாட்டிய ஆற்றுகை நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (30ஆம் திகதி) மாலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது, கலைக்கோகிலம் ஆற்றுகை நிறுவனத்தின் முதுகலை கலைஞர்களான திருமதி சதீஸ்குமார் பிரசன்னியா நட்டுவாங்கக் கலைஞர்களின் கலைப் படைப்பில் உருவான பரத நாட்டிய நடனங்கள் இங்கு அரங்கேற்றம் பெற்றன.


இவ் நிகழ்விற்குப் பிரதம அதிதியாக நிதியமைச்சின் பொதுச் சேவைகள் தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவ திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகம் எஸ். கிரிதரன் அவர்கள் கலந்து கொண்டு நினைவு மலரினை வெளியீட்டு வைத்தார்.

இந் நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறவனப் பணிப்பாளர் சீ.ஜெயசங்கர், மட்டு கல்வி வலய பணிப்பாளர் கே. பாஸ்கரன் மட்டு மேற்கு வலய கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் மட்டு மாநகர சபை பிரதி ஆணையாளர் ந. தனஞ்சயன் ஆகியோருடன் கலை ரசிகர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு புஸ்பாஞ்சலி தீப நடனம், கைச்சிலம்பு நடனம் அலாரிப்பு சின்னஞ்சிய எறும்பு நடனம், சப்தம் என பல வகை நடன நிகழ்வுகள் இங்கு இடம் பெற்றதுடன் மட்டு மாவட்டத்தின் கலைப்பணியாற்றிய கலைஞர்களின் நினைவாக நினைவு மலரொன்றும் வெளியீட்டு வைக்கப்பட்டது.








No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages