Breaking

Post Top Ad

Sunday, October 21, 2018

மட்டக்களப்பில் சஜீத் பிரேமதாசவினால் விழுது நகர், சுபீட்சம் கிராமம் வீட்டு திட்டம் திறந்துவைப்பு

(கே.கே.தர்சன்)          
 வீடமைப்பு அமைச்சர் சஜீத் பிரேமதாச நேற்று 20ம் திகதி காலை மட்டக்களப்பு கொக்குவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள விழுது நகர், சுபீட்சம் கிராமம் ஆகிய 2 வீட்டத்திட்டங்களைத் திறந்து வைத்தார்

மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபை முகாமையாளர் கே.ஜெகநாதன் தலைமையில்நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் அலிசாஹிர் மௌலனா,  பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்,  மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா உதயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டதையடுத்து அமைச்சர், மற்றும் அதிதிகளால்  வீட்டுத்திட்ட நினைவுக்கல் திரை நீக்கம் செய்து வைததார். அதனையடுத்து வீட்டுத்திட்டம் அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளுடனும் அமைச்சர் கலந்துரையாடினார்.

இன்றைய தினம் விழுது நகர் கிராமத்தில் 25 வீடுகளும், சுபீட்சம் கிராமத்தில் 18 வீடுகளுமாக 43 வீடுகள் இன்றைய தினம் கையளிக்கப்பட்டன.










No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages