(படுவான் எஸ்.நவா)
கிழக்குமாகாண இலக்கிய விழாவையொட்டி கிழக்கு மாகாண பண்பாட்டிலுவல்கள் திணைக்களம் நடாத்திய அரச உத்தியோகத்தர்களுக்கிடையிலான படைப்பாக்கப்போட்டியின் சிறுகதைப்போட்டியில் கவிஞர். திரு.ச.கணேசமூர்த்தி அதிபர் முதலாம் இடத்மினைப்பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பட்டிருப்புக் கல்வி வலயத்தின் போரதீவுப்பற்று கோட்டத்தில் உள்ள கஷ்ரப்பிரதேச பாடசாலையான வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலய அதிபராக கடமையாற்றி வரும் இவர் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு இலக்கியப் படைப்புக்களை சமூகத்துக்காக வழங்கியுள்ளதோடு மிகச் சிறந்த கவிஞராகவும் மேடைப்பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் போற்றப்பட்டு வருகிறார். இவரது ஆற்றல்களும் திறமைகளும் மேன்மேலும் ஒங்குவதற்காக பாராட்டுகின்றோம்.இவ்வதிபர் கல்வியமைச்சினால் வருடாவருடம் வழங்கப்பட்டு வரும் அதிசிறந்த அதிபர்களுக்கான குருபிரதிபாபிரபா விருதினை 2016ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.