குறித்த மாணவி நேற்று காலை பாடசாலைக்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.
இதன்பின்னர் நேற்று மாலை சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த சந்தர்ப்பத்திலேயே கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து க.பொ.த உயர்தரத்தில் பயிலும் வசந்தராஜா தேவயாணி (18 வயது) என்ற குறித்த மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாணவியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடயவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மற்றும் காத்தான்குடி பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மாணவியின் மரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதாக தெரியவருகின்றது.

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.